Offers

இது ஒரு ஆன்லைன் பயிற்சி மையம்

பாடங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் நலனுக்காக பயிற்சிப் பாடங்கள் கவனமாகவூம் தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த பாடங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் ஃபோன் வழியாகவே படிக்கலாம்.உங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து விளக்கம் பெறலாம்.அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர் கட்டணங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Show More

IAS தேர்வில் வெற்றி நிச்சயம் -3



"பலவீனத்தை பலமாக்குவோம்"

 எந்த தேர்வாக இருந்தாலும் ஏன் பள்ளிக் கூடப் படிப்பாகவே இருந்தாலும் அதில் சில பாடங்கள் படிப்பதற்கு விருப்பமாகவூம் சில பாடங்கள் கசப்பாகவூம் இருக்கும்.ஐஏஎஸ் தேர்விலும் அது போன்ற சில பாடங்கள் உங்களுக்குப் பிடித்ததாகவூம் சில பாடங்கள் குழப்பமாக அது என்னவென்றே தெரியாததாகவூம் சில பாடங்கள் இதைப் போய் படிக்க வேண்டியிருக்கிறதே.இது எனக்குப் பிடிக்காதே என்பதாக இருக்கக் கூடும்.
 இப்போது நீங்கள் பிரில்லிம் தேர்வூக்கு தயார் செய்வதாக வைத்துக் கொள்வோம்.வீட்டில் தரையில் அமர்ந்து புத்தகங்களை எடுத்து அடுக்கி வைப்பது போல இதனை செய்யப் போகிறீர்கள்.
 பிரில்லிம் தேர்வூக்கான பாடங்கள் என்னென்ன என்பதை தோன்றியவாறு (ராண்டமாக) ஒரு தாளில் எழுதிக் கொண்டே வாருங்கள்.அதில் உங்களால் நன்றாகச் செய்ய முடியூம்.இதெல்லாம் எனக்கு விருப்பமானப் பாடங்கள் என்பவற்றை பச்சை இங்க் பேனாவால் டிக் அடித்துக் கொண்டே வாருங்கள்.இது என்ன என்றே தெரியவில்லை என்ற பாடங்களை டிக் அடிக்க வேண்டாம்.அது பாட்டுக்கு அப்படியே இருக்கட்டும்.பிடிக்காத கசப்பான பாடங்களை சிவப்பு இங்க் பேனாவால் டிக் அடியூங்கள்.
 இது இன்றைக்குப் போதும்.
 நாளை காலையில் எழுந்து இன்னொரு தாளில் வரிசையை மாற்றி எழுதுங்கள்.
முதலில் பிடிக்காத கசப்பான பாடங்கள்.
அடுத்து குழப்பமான புரியவே புரியாத பாடங்கள்.
அதன்பின் விருப்பமான பாடங்கள்.
 இப்போது உங்களது படிக்க வேண்டிய நேரத்தை 3 2 1 என்ற விகிதத்தில் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதாவது தினமும் படிப்பதற்கு ஒதுக்கப்படும் நேரத்தில் அதிக நேரத்தை பிடிக்காத பாடத்திற்கும் அதற்கும் சற்று குறைவான நேரத்தை புரியாதப் பாடத்தையூம் மீதமுள்ள நேரத்தை பிடித்தமான பாடங்களுக்கும் என்று ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
 இப்போது பாடங்களுக்கு தயார் செய்யூம் போது உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத பாடங்களில் உள்ளவற்றில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அதை ஒரு மலையாக நினைத்துக் கொள்ளுங்கள்.இந்த மலையை உடைப்பதற்கு இன்னொரு மலையைக் கொண்டா மோத முடியூம்.ஒரு சின்ன உளியை வைத்துக் கொண்டுதானே ஒவ்வொரு அடியாக அடித்து அடித்து பெயர்த்து எடுக்க வேண்டும்.
 அதைப் போல முதலில் அந்த புத்தகத்தில் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் அதில் உள்ளவற்றை மட்டும் நீங்களாகவே படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுதான் இதில் மலையை உடைப்பதற்கான முதல்படி.
 எனவே-
 முதலில் ஒரு பக்கம்.
 அதன்பிறகு சில பக்கங்கள்.
 அதன்பிறகு ஒரு சாப்டர் என்றபடி இந்த முயற்சி போகட்டும்.
 புரியாத பாடங்களின் மீது விருப்பு வெறுப்பு இல்லை என்பதால் அதனை மற்றவர்களின் உதவியூடன் படித்து தெரிந்து கொள்ளலாம்.
 பிடிக்காத பாடத்தின் மீதுள்ள வெறுப்பை விரட்டுவதுதான் இப்போதைய முதல் டாஸ்க்!
 அதனால் அதனை தினமும் முதலில் சிறுகச் சிறுக படித்து அதன்மீது ஒரு விருப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
 செய்தால்-
 நாளடைவில் அந்த பாடங்களை உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அந்த பாடங்களுக்கு உங்களைப் பிடித்து விடும்.
 செய்து பாருங்கள்.
Newest
Previous
Next Post »