Offers

இது ஒரு ஆன்லைன் பயிற்சி மையம்

பாடங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் நலனுக்காக பயிற்சிப் பாடங்கள் கவனமாகவூம் தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த பாடங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் ஃபோன் வழியாகவே படிக்கலாம்.உங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து விளக்கம் பெறலாம்.அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர் கட்டணங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Show More

IAS தேர்வில் வெற்றி நிச்சயம் -2



"இதுதான் கடைசி சந்தர்ப்பம்"


 பொதுவாக எல்லோர் மனதிலும் இருக்கிற ஒரு அசால்ட்டான 'பார்த்துருவோம்.இப்ப என்ன' என்ற எண்ணம் மட்டும் இந்த தேர்வூக்கான தயார் செய்தலில் வரவே கூடாது.ஓடும் மானை துரத்தும் சிங்கத்திற்கு வேண்டுமானால் இந்த மான் இல்லாவிட்டால் இன்னொரு மான் கிடைக்காதா என்ன.துரத்திப் பார்ப்போம்.கிடைத்தால் அடித்து சாப்பிடுவோம்.இல்லையென்றால் இன்னொரு மான் காட்டில் இல்லாமலா போகும் என்ற எண்ணத்துடன் சிங்கம் பாய்ந்து கொண்டிருக்க மானின் நினைப்பு வேறு மாதிரி இருக்கும்.
 இதுதான்; கடைசி.
 இந்த ஓட்டத்தில் சிங்கத்திடம் சிக்கினால் இன்றைக்கு அதற்கான பீட்ஸா நாம்தான்.எனவே ஓடு.ஒரே ஓட்டமாக ஓடு.இதுதான் கடைசி சந்தர்ப்பம்.அத்தனை சக்தியையூம் திரட்டி வாழ்வா சாவா என்பது போல மான் ஓடிக்கொண்டிருக்க...
 யாருக்கு வெற்றி கிடைத்திருக்கும்.
 சிங்கம் அடுத்த அட்டம்ட்டிற்கு காத்திருக்க மான் வெற்றி பெற்றிருக்கும்.
 அதேதான் இங்கும் தேவைப்படுகிறது.
 வேலைகளுக்கான போட்டித் தேர்வூகளைப் பொறுத்தவரை 'இன்னொரு அட்டம்ட்' என்பது ஒரு மிகப் பெரிய பலவீனம்.இந்த இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்பதாலேயே முதல்வாய்ப்பை பலரும் சரியாகப் பயன்படுத்துவதில்லை.முதல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத காரணத்தாலேயே இரண்டாவது வாய்ப்பையூம் 'சரி எழுதித்தான் பார்ப்போமே.லக் இருந்தால் கிடைக்கும்" என்ற ஸ்திரத்தன்மையற்ற மனோபாவத்தை நோக்கி உங்களை நீங்களே தள்ளி விட்டு விடுகிறீர்கள்.
 எனவே-
 இதுதான் கடைசி.
 இந்த முறை வெற்றி பெற்றால்தான் வாழ்க்கையே.
 விடாதே பிடி.
 எப்படியாவது என்ன முயற்சி செய்தாவது ஒரு நாளின் அத்தனை மணி நேரத்தையூம் பயன்படுத்தி இந்த தேர்வூ மட்டுமே வாழ்க்கை என்பது போல தயார் செய்ய ஆரம்பித்தால் அது முதல் முயற்சியிலேயே வெற்றி தருகிறதோ இல்லையே.ஒரு கம்பீரமான முதல் அட்டம்ட்டை உங்களுக்கு தரும்.
 பலநேரங்களில் இந்த உறுதியூடன் முதல் முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெற்றியூம் பெற்று விடுகிறார்கள்.
 ஆக இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பது போல  அடித்து நொறுக்குங்கள்.
வெற்றி கிடைக்கும்.
(தொடரும்)
Previous
Next Post »