Offers

இது ஒரு ஆன்லைன் பயிற்சி மையம்

பாடங்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள இருப்பவர்களின் நலனுக்காக பயிற்சிப் பாடங்கள் கவனமாகவூம் தேர்வில் வெற்றி பெறும் வகையிலும் தயார் செய்யப்பட்டுள்ளன.இந்த பாடங்களை நீங்கள் வீட்டிலிருந்தே மொபைல் ஃபோன் வழியாகவே படிக்கலாம்.உங்களது சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்து விளக்கம் பெறலாம்.அவ்வப்போது அறிவிக்கப்படும் ஸ்பெஷல் ஆஃபர் கட்டணங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Show More

IAS தேர்வூகளில் வெற்றி நிச்சயம் -1



தலையங்கத்தை மட்டும்

 மத்திய அரசாங்கம் நடத்தும் யூபிஎஸ்சி தேர்வூகளில் குறிப்பாக ஐஏஎஸ் பணிகளுக்கான தேர்வூகளில் வெற்றி பெற வேண்டுமானால் அதனை ஒரு தவம் போல செய்ய வேண்டும்.அதற்கென சில வழிமுறைகளை ஒன்றன்பின் ஒன்றாக பின்பற்ற வேண்டும்.அவை என்னென்ன? அவைகளை எப்படிக் கையாள வேண்டுமென்பதை இந்த கட்டுரைத் தொடரில் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்போகிறௌம்.
 யூபிஎஸ்சி தேர்வூக்கு தயார் செய்கிறாயா?
 முதலில் செய்தித்தாள்களை நன்றாக தரோவாக வாசிக்கப் பழகிக் கொள் என்பார்கள்.இப்படித்தான் அந்தக் காலத்திலிருந்து இப்போதைய மொபைல் மற்றும் ஆஃப்ஸ் உலகிலும் சொல்லி வருகிறார்கள்.
 செய்தித்தாள்களை வாசிப்பது நல்ல பழக்கம்தான் என்றாலும் இதிலும் வாசிப்பதற்கென்று ஒரு ஹைரார்க்கி இருக்கிறது.இன்ன விதமாகத்தான் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது.சாதாரணமாக  மற்றவர்கள் வாசிப்பதற்கும் நீங்கள் வாசிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.அதனை அவ்வப்போது ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.
 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.பிராக்டிக்கலாக செய்ய வேண்டிய காரியம் இது.
 முதலில் ஒரு பாக்ஸ் ஃபைல் வாங்கிக் கொள்ளுங்கள்.அதில் ஒரு செய்தித்தாளுக்கு ஒரு ஃபைல் என்ற அளவில் இரண்டு அல்லது மூன்று செய்தித்தாள்களுக்கு என்று வைத்துக் கொண்டால் போதும்.தமிழில் வரும் அறுபது வயது அழகி கொலை.ரயில்வே கிராசிங்கில் விபத்து.மடாதிபதிகளின் அருளுரை போன்ற செய்தித்தாள்களை புறக்கணிப்பது நலம்.
 ஆங்கில செய்தித்தாள்கள் போதும்.
 அந்த செய்தித்தாள்களில் தினமும் வரும் தலையங்கத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதனை தினமும் வாசிக்க வேண்டாம்.முதலில் வெறுமனே ஃபைலில் சேர்த்துக் கொண்டே வந்தால் போதும்.
 ஒவ்வொரு வார இறுதியிலும் அமர்ந்து டிவியில் ஜஸ்டின் பைபரையோ சாய்னா நெஹ்வாலையோ பார்த்துக் கொண்டே ஒரே மூச்சில் தலையங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக வாசித்து விடுங்கள்.அதன்பின் வாசித்த தலையங்கத்திற்கு சின்ன வயதில் பள்ளிக் கூடத்தில் மூன்றில் ஒரு பங்காக சுருக்கி எழுதுவது போல  ஒவ்வொரு தலையங்கத்தின் சாராம்சத்தையூம் கண்டிப்பாக இரண்டு வரிகளுக்கு மிகாமல் சுருக்கி எழுதி அதனையூம் ஃபைலில் கோர்த்து விடுங்கள்.
 இந்த அத்தியாயத்தில் நான் அதிகம் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை 'ஒன்றன் பின் ஒன்றாக" இதுதான் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை.
 எதையூம் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் ஆரம்பத்தில் செய்ய வேண்டியிருக்கும்.
மற்றவை பிறகு
(தொடரும்)
Previous
Next Post »